செய்திகள்
ராகுல் காந்தி

அண்டை நாடுகளுடனான உறவை மோடி அரசு சீர்குலைத்துவிட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2020-09-24 00:34 GMT   |   Update On 2020-09-24 00:34 GMT
பல ஆண்டுகளாக அண்டை நாடுகளுடன் காங்கிரஸ் பேணி பாதுகாத்து, வளர்த்து வந்த நல்லுறவை மோடி அரசு சீர்குலைத்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசின் வெளியுறவு கொள்கையை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ், அண்டை நாடுகளுடனான உறவை மத்திய அரசு பலவீனப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் இதை மறுத்துள்ள மத்திய அரசு, சர்வதேச அளவில் பல நாடுகளுடன் உறவை இந்தியா வலுப்படுத்தி இருப்பதாக கூறி இருக்கிறது.

இந்த நிலையில், “இந்தியாவுடனான வங்காளதேசத்தின் உறவு பலவீனம் அடைந்தும், சீனாவுடனான உறவு வலுவடைந்தும் உள்ளது” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் ஒரு செய்தியை இணைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், பல ஆண்டுகளாக அண்டை நாடுகளுடன் காங்கிரஸ் பேணி பாதுகாத்து, வளர்த்து வந்த நல்லுறவை மோடி அரசு சீர்குலைத்து விட்டதாகவும், அண்டையில் வசிப்பவர்களுடன் நட்புறவு இல்லாமல் வாழ்வது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News