செய்திகள்
சித்தராமையா ராகுல்காந்தி

கொரோனா பாதிப்புக்கு உள்ளான சித்தராமையா குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து

Published On 2020-08-10 03:03 GMT   |   Update On 2020-08-10 03:03 GMT
கொரோனா பாதிப்புக்கு உள்ளான கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். அவர், பெங்களூரு பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய சித்தராமையாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவிடம் ராகுல்காந்தி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உடல் நலம் குறித்து சித்தராமையாவிடம் ராகுல்காந்தி கேட்டு அறிந்து கொண்டார். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய சித்தராமையாவுக்கு ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபோல, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான வேணுகோபாலும் சித்தராமையாவை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைய சித்தராமையாவுக்கு வேணுகோபாலும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News