செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

பற்றி எரியும் தேவாலயம் - வைரலாகும் பரபர வீடியோ

Published On 2020-07-29 04:03 GMT   |   Update On 2020-07-29 04:03 GMT
பாகிஸ்தானில் தீ வைத்து எரிக்கப்படும் தேவாலயத்தின் பரபர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பாகிஸ்தானில் உள்ள தேவாலயம் ஒன்றை மர்ம கும்பல் தீ வைத்து எரிக்கும் காட்சிகள் அடங்கிய பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேவாலயம் மட்டுமின்றி அதன் அருகில் இருக்கும் பள்ளிக்கூடமும் தாக்கப்படுகிறது. அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான நிலையை உணர்த்துவதாக இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அது செப்டம்பர் 21, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. முஸ்லீம் போராட்டக்காரர்கள் 82 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தை தீயிட்டு எரித்தனர். இத்துடன் தேவாலயத்தின் அருகில் இருந்த பள்ளி ஒன்றும் இந்த சம்பவத்தின் போது தாக்கப்பட்டது.



இந்த சம்பவம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ் எனும் திரைப்படம் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் தேவாலயத்தை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

அந்த வகையில் வைரல் வீடியோ சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. உண்மையில் இது திரைப்படம் ஒன்றின் வெளியீட்டுக்கு எதிர்ப்பு போராட்டமே இந்த சம்பவத்திற்கு காரணம் ஆகும்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News