செய்திகள்
ஆசிய வளர்ச்சி வங்கி

கொரோனா தடுப்பு நடவடிக்கை: இந்தியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் கடனுதவி - ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்

Published On 2020-04-28 14:05 GMT   |   Update On 2020-04-28 14:05 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி: 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை இன்று 937 ஆக உயர்வடைந்து உள்ளது. 7,027 பேர் குணமடைந்தும், 22,010 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,974 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் பொதுமக்களும், நிறுவனங்களும் பொருளாதாரப் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், மக்களின் இன்னலைக் குறைக்கவும், பொருளாதார மீட்சிக்கும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 1.5 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்கவும், நோயைக் கட்டுப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். ஏழைகளுக்கு உதவுவதற்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News