செய்திகள்
ஜி ஜின்பிங் வைரல் புகைப்படம்

கொரோனாவை எதிர்கொள்ள மசூதி சென்று வழிபட்டாரா சீன அதிபர்

Published On 2020-02-07 05:23 GMT   |   Update On 2020-02-07 05:23 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க சீன அதிபர் மசூதிக்கு சென்று வழிபட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.



சீன அதிபர் ஜி ஜின்பிங் மசூதி ஒன்றுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் உள்ளூர் செய்தி நிறுவன வீடியோ ஸ்கிரீன்ஷாட்கள் இடம்பெற்று இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலில் இருந்து அனைவரையும் காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்வதற்காக சீன அதிபர் மசூதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

புகைப்படங்களை ஆய்வு செய்ததில், வைரல் புகைப்படங்கள் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வைரல் புகைப்படங்கள் சீன அதிபர் சீனாவின் இன்சுவான் நகரில் உள்ள ஜின்செங் மசூதிக்கு சென்ற போது எடுக்கப்பட்டதாகும். 



அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் பழையது என்பதும், இவற்றுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

எனினும், புகைப்படங்கள் உண்மையென நம்பிய நெட்டிசன்கள் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டிக் கொள்ள சீன அதிபர் மசூதிக்கு சென்றார் எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிரந்து வருகின்றனர். ஃபேஸ்புக்கில் பல்வேறு குரூப்களில் இதுபோன்ற பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News