செய்திகள்
ப.சிதம்பரம்

குடியிருப்புகளுக்கு முன்னுரிமை அளித்தது காங்கிரஸ், குடியுரிமைக்கு அல்ல - ப.சிதம்பரம் டுவிட்

Published On 2019-12-26 14:03 GMT   |   Update On 2019-12-26 14:03 GMT
நாட்டில் குடியிருப்பாளர்களை நாங்கள் கணக்கிட்டோம், குடியுரிமையை அல்ல. குடியுரிமைக்கு பா.ஜ.க. முக்கியத்துவம் அளிக்கிறது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:

2010-ம் ஆண்டில்  தேசிய மக்கள்தொகை பதிவு  அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ கிளிப்பை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. காங்கிரஸ்  கால தேசிய மக்கள்தொகை பதிவு மற்றும் தற்போதைய பதிவில் உள்ள வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி, தொடர்ச்சியான டுவீட் மூலம் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெளிவுபடுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

நாட்டின் ‘வழக்கமான குடியிருப்பாளர்களை’ நாங்கள் கணக்கிட்டோம் குடியுரிமையை அல்ல. தற்போது  குடியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

2011 கணக்கெடுப்பைத் தயாரிப்பதற்கு தேசிய மக்கள்தொகை பதிவு உதவுவதாக அவர் கூறினார். ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரும் அவரது மதம் அல்லது பிறந்த இடத்தைப் பொருட்படுத்தாமல் கணக்கிடப்பட வேண்டும்.

இரண்டுக்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால், தேசிய குடியுரிமை பதிவு (என்.ஆர்.சி) பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் ஒரு பெரிய மற்றும் மோசமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவு மிகவும் ஆபத்தானது. 2010ன் தேசிய மக்கள்தொகை பதிவும் தற்போதைய பதிவும் அடிப்படையில் மிகவும் வித்தியாசமானது. தேசிய குடியுரிமை பதிவை  தேசிய மக்கள்தொகை பதிவுடன் இணைக்க அவர்களுக்கு விருப்பமில்லை.

பா.ஜ.க.வின் நோக்கங்கள் நேர்மையானவை என்றால், அவர்கள் 2010-ம் ஆண்டின் தேசிய மக்கள்தொகை பதிவு படிவத்தையும் வடிவமைப்பையும் ஆதரிப்பதாகவும், சர்ச்சைக்குரிய தேசிய குடியுரிமை பதிவுடன் இணைக்கும் எண்ணம் இல்லை என்றும் அரசாங்கம் நிபந்தனையின்றி கூறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News