செய்திகள்
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ரகசிய பதுங்குமிடம் கண்டுபிடிப்பு - ஆயுதங்கள் பறிமுதல்

Published On 2019-12-01 09:53 GMT   |   Update On 2019-12-01 09:53 GMT
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் இயந்திர துப்பாக்கிகள், தோட்டாக்கள், சாட்டிலைட் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஜம்மு:

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், சோபோர் அருகாமையில் உள்ள ரபியாபாத் பகுதியில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்குமிடத்தை கண்டுபிடித்தனர்.


அங்கிருந்து இரு ஏ.கே.47 இயந்திர துப்பாக்கிகள் 2 ஆயிரம் தோட்டாக்கள், இரு ஒயர்லெஸ் கருவிகள் மற்றும் ஒரு சாட்டிலைட் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News