செய்திகள்
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்

பகத்சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் - பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்

Published On 2019-10-26 12:18 GMT   |   Update On 2019-10-26 12:18 GMT
சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலம் அனந்தபூர் சாஹிப் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் மணிஷ் திவாரி. இவர் கடந்த நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில ஆட்சியை எதிர்த்த காரணத்துக்காக 1931, மார்ர் 23ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

இந்திய சுதந்திரத்துக்காக உயிர் நீத்த இம்மூவரையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பகத் சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு மத்திய அரசுன் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி அளிக்க வேண்டும்.

மேலும், மொகாலியில் அமைந்துள்ள சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயரை வைக்க வேண்டும். இதன்மூலம் 124 கோடி இந்தியர்களின் இதயங்களில் இவர்கள் ஊடுருவி இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டச்பை தேர்தல் பிரசாரத்தின்போது, வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவ்டிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News