செய்திகள்
காங்கிரஸ்

மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் - பாத யாத்திரைகள் நடத்த காங்கிரஸ் முடிவு

Published On 2019-09-05 10:21 GMT   |   Update On 2019-09-05 10:21 GMT
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் 9ம் தேதி வரை பாத யாத்திரைகள் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான தேசிய குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் நீதிபதிகள், மக்களவை சபாநாயகர், மத்திய கேபினட் உறுப்பினர்கள், மாநில முதல் மந்திரிகள் மற்றும் காந்தியை பின் தொடரும் தொண்டர்கள் பலர் உள்ளனர்.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் 9ம் தேதி வரை பாத யாத்திரைகள் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் 9ம் தேதி வரை கொண்டாட திட்டமிட்டுள்ளது. காந்தி பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாத யாத்திரைகள் நடத்த உள்ளோம் என தெரிவித்துள்ளது. 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News