செய்திகள்
அத்வானியுடன் பிரதமர் மோடி (கோப்பு படம்)

காஷ்மீர் விவகாரத்தில் துணிச்சலான முடிவு - பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டு

Published On 2019-08-05 10:33 GMT   |   Update On 2019-08-05 10:33 GMT
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த வரலாற்று சிறப்புக்குரிய துணிச்சலான முடிவுக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுவதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பிஜு ஜனதா தளம், அ.தி.மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வரலாற்று சிறப்புக்குரிய துணிச்சலான முடிவுக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுவதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான அத்வானி தெரிவித்துள்ளார்.



டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அத்வானி, 'இந்த முடிவு நாட்டை ஒருமைப்படுத்தும் துணிச்சலான நடவடிக்கையாகும். இந்த வரலாற்று சிறப்புக்குரிய முடிவை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை பாராட்டுகிறேன்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் உள்ள மக்களின் அமைதி, வளம் மற்றும் மேம்பாட்டுக்காக பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News