செய்திகள்
பிரதமர் மோடி

நமது விஞ்ஞானிகள் உலகிலேயே தலை சிறந்தவர்கள் - பிரதமர் மோடி

Published On 2019-07-28 09:08 GMT   |   Update On 2019-07-28 09:08 GMT
சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மூலம் நமது விஞ்ஞானிகள் உலகின் தலை சிறந்தவர்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு கடந்த மாதம் “மான் கீ பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கினார்.

இன்று வானொலியின் மான் கீ பாத் உரையில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தண்ணீர் சேமிப்பு குறித்து பாரம்பரிய முறைகளை மக்கள் என்னிடம் பகிர்ந்து உள்ளனர். மீடியாக்கள் இதனை பெரிய இயக்கமாக நடத்தி வருகின்றன. தண்ணீர் சேமிப்புக்கு அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டிகை காலங்களில் கொண்டாடப்படும் விழாக்களில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த விழாக்களின் போது தண்ணீர் சேமிப்பு குறித்து தெரு நாடகங்கள் உள்பட பல வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

நாட்டில் முதல் முறையாக தண்ணீர் கொள்கையை மேகாலயா அரசு உருவாக்கி உள்ளது. இதற்காக அம்மாநில அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

அரியானாவில் குறைந்த நீர் பயன்படுத்தப்படும் பயிர்கள் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு இழப்பு குறைகிறது.

சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் திறமை நிரூபிக்கப்பட்டுள்ளது.நமது விஞ்ஞானிகள் உலகின்தலை சிறந்த விஞ்ஞானிகள் என்பது நிரூபணமாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News