செய்திகள்
முதல் மந்திரி குமாரசாமி

அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் ஆசைப்பட்டது கிடையாது - குமாரசாமி உருக்கம்

Published On 2019-07-23 13:15 GMT   |   Update On 2019-07-23 13:15 GMT
கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்துக்கு பதிலளித்த முதல் மந்திரி குமாரசாமி, அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் ஆசைப்பட்டது கிடையாது என உருக்கமாக பேசினார்.
பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் இன்றும் நடைபெற்றது. இறுதியாக, முதல் மந்திரி குமாரசாமி இன்று மாலை விவாதத்துக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தவறுகளை சரிசெய்யும் நேரம் இது. நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. நான் வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளேன், நல்ல விஷயங்கள் பல செய்துள்ளேன்.

நான் என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது, நான் திருமணம் செய்தபோது எனது மனைவி என்னிடம் வாங்கிய முதல் சத்தியம் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது தான். அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்குள் நுழைந்தேன்

காலத்தின் கட்டாயத்தால் நான் அரசியலில் நுழைந்தேன், அதே கட்டாயத்தின்பேரில் எனது மனைவியும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது என் முன்பு அமர்ந்துள்ளார்.



நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலை விட்டு விலகவேண்டும் என முடிவு செய்தேன். ஆனால் குலாம் நபி ஆசாத் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த முடிவை கைவிட்டேன்.

ஊழல் செய்து பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. சட்டத்தில் விதி 10 குறித்தோ அல்லது வேறு சட்ட நுணுக்கம் குறித்தோ பேச விரும்பவில்லை. வாழ்க்கையில் நான் பல தவறுகளை செய்துள்ளேன்; பல நல்ல விஷயங்களையும் செய்துள்ளேன் என உருக்கமாக பேசினார்.
Tags:    

Similar News