செய்திகள்
எடியூரப்பா

பா.ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு தர வேண்டும் - எடியூரப்பா

Published On 2019-07-22 06:44 GMT   |   Update On 2019-07-22 06:44 GMT
கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு தர வேண்டும் என்று எடியூரப்பா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பெங்களூர்:

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. ஆனாலும் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறியதையடுத்து சட்ட சபையில் விவாதம் நடந்து வருகிறது.

இன்று விவாதத்தை நீட்டிக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் சட்ட சபையில் நீட்டிக்கப்பட்டால் அது ஜனநாயகத்துக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.


நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தோற்பது உறுதி. இதைத்தொடர்ந்து பா.ஜனதா அரசு அமைக்க வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையை பா.ஜனதா அரசு மேற்கொள்ளும்.

காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு அந்த கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவிட்டுள்ளனர். அவர்களின் உத்தரவுகளால் எந்த விளைவுகளும் ஏற்படப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News