செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி 10-ம் தேதி அமேதி பயணம்

Published On 2019-07-08 09:48 GMT   |   Update On 2019-07-08 11:56 GMT
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக வரும் பத்தாம் தேதி அமேதிக்கு செல்கிறார்.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.



அந்த தேர்தலில் அமேதி தொகுதியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் பறிகொடுத்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக வரும் பத்தாம் தேதி அமேதி தொகுதிக்கு செல்கிறார்.

ஒருநாள் பயணமாக டெல்லியில் இருந்து பத்தாம் தேதி காலை அமேதி வரும் ராகுல் காந்தி இரு இடங்களில் காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என உ.பி.சட்டமன்ற காங்கிரஸ் மேல்சபை  உறுப்பினர் தீபக் சிங் தெரிவித்தார்.
Tags:    

Similar News