ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையத்தின்மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்தின்மீது கையெறி குண்டு வீச்சு
பதிவு: ஜூன் 18, 2019 21:53
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மிரின் அனந்தநாக் மாவட்டத்தில் பதுங்கியிருந்த 2 பயங்கர்வாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று காலை சுட்டுக் கொன்றனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம்மீது பயங்கரவாதிகள் இன்று மாலை கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த வழியாக சென்ற 7 பேர் காயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :