search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grenade attack"

    காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனத்தின் மீது இன்று மாலை பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். #Srinagargrenadeattack #grenadeattack
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் இன்று மாலை வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    இன்று மாலை 6.45 மணியளவில் பல்லாடியம் சினிமா தியேட்டர் வழியாக ரோந்து வாகனங்கள் வந்தபோது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென்று கையெறி குண்டுகளை வீசி எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தினர்.

    இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 வீரர்கள், இரு பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீசாரும், பாதுகாப்பு படையினரும் விரைந்துள்ளனர். #Srinagargrenadeattack #grenadeattack 
    எத்தியோப்பியாவில் பிரதமரை குறிவைத்த நிகழ்த்திய குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Ethiopianpminister #Ethiopiablast
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் நேற்று முன்தினம் ஒரு பேரணியின் நிறைவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் அபிய் அகமது (வயது 41) கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசி முடித்ததும், அங்கே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. மேடையில் இருந்த பிரதமரை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், அவர் காயமின்றி தப்பினார்.

    ஆனால் இந்த குண்டுவெடிப்பில் 153 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறிது நேரத்தில் இறந்தார்.



    இந்த நிலையில், மேலும் ஒருவர் நேற்று இறந்தார். இதனால் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    இதுபற்றிய தகவலை வெளியிட்ட அந்த நாட்டின் சுகாதார மந்திரி அமிர் அமன், “குண்டுவெடிப்பில் மேலும் ஒரு எத்தியோப்பியர் இறந்துவிட்டார் என்று தகவல் வந்து உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

    இந்த குண்டுவெடிப்பில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாகவும் 8 பேரை பிடித்து போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதாக அடிஸ் அபாபா நகர துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். #LassiporaPoliceStation #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் லஸ்சிபோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் போலீசார் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்கு வந்த சில பயங்கரவாதிகள் காவல் நிலையத்தின் வெளிப்பகுதியில் கையெறி குண்டுகளை வீசினர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்தவர்கள் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    இந்த தாக்குதலின் சேத விவரங்கள் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    #LassiporaPoliceStation #MilitantsAttack
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இன்று கை யெறிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #GrenadeAttack
    ஸ்ரீநகர் : 

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் உள்ள பரபரப்பான மார்க்கெட் பகுதியில் பயங்கரவாதிகள் இன்று கை யெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் 4 போலீசார் மற்றும் 12 பொதுமக்கள் என 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

    சோபியன் பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினரை குறிவைத்து இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு பின்னர் அப்பகுதி போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #GrenadeAttack
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பயங்ரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வீரர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மத்திய துணை ராணுவப் படையினர் வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, இங்குள்ள ஃபத்தேக்டல் பகுதியில் ரோந்துப் படையினர் வந்தபோது மறைந்திருந்த சில பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த இரு வீரர்கள், ஒரு பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர். #Srinagargrenadeattack
    ஜம்மு காஷ்மீரின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் பயங்கரவாதிகள் சீலர் கையெறி குண்டுகளை வீசியதால பரபரப்பு ஏற்பட்டது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வருபவர் முஷ்டாக் ஷா. இவர் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

    இன்று அவரது வீட்டின் முன்பகுதியில் உள்ள லானில் பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயமேற்படவில்லை. தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tamilnews
    ஜம்முவில் பேருந்து நிறுத்தம் அருகில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர். #Jammu #GrenadeAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு பேருந்து நிலையம் அருகில் நேற்று நள்ளிரவு போலீசார் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் போலீசார் வாகனம் சேதமடைந்தது. அதில் பயணித்த 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Jammu #GrenadeAttack
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் ஆறு பேர் காயமடைந்தனர். #JammuKashmir #Anantnaggrenadeattack

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா-ஜம்மு செக்டாரில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆர்.எஸ்.பொரா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. 

    இந்நிலையில், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனத்தை மீது சிலர் குண்டுவீசி தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் வீசிய குண்டு எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மக்கள் கூட்டத்தில் விழுந்து வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு பெண் உட்பட அப்பாவி பொதுமக்கள் ஆறு பேர் காயமடைந்திருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #Anantnaggrenadeattack
    ×