என் மலர்
நீங்கள் தேடியது "கையெறி குண்டு தாக்குதல்"
காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனத்தின் மீது இன்று மாலை பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். #Srinagargrenadeattack #grenadeattack
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் இன்று மாலை வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இன்று மாலை 6.45 மணியளவில் பல்லாடியம் சினிமா தியேட்டர் வழியாக ரோந்து வாகனங்கள் வந்தபோது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென்று கையெறி குண்டுகளை வீசி எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தினர்.

இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 வீரர்கள், இரு பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீசாரும், பாதுகாப்பு படையினரும் விரைந்துள்ளனர். #Srinagargrenadeattack #grenadeattack






