செய்திகள்

இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்தினேனா? - அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

Published On 2019-03-25 09:43 GMT   |   Update On 2019-03-25 09:43 GMT
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார். #AAP #AravindKejriwal #BJP
புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 20-ம் தேதி, துடைப்பத்துடன் ஒருவர், சுவஸ்திக் போன்ற  சின்னத்தினை துரத்துவது போல உள்ள படத்தினை பகிர்ந்திருந்தார். இந்த பதிவு பாஜக ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.



இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதாகவும், மத வெறுப்புகளை தூண்டும் விதமாக கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார் என்றும் அவர்  மீது பாஜக தலைவர்கள் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.

மேலும் அந்த பதிவில் இருந்த சின்னம் இந்துக்களின் வழிபாட்டு சின்னங்களில் ஒன்றான சுவஸ்திக் சின்னத்தினைபோல் இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.

இது குறித்து கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர்  கூறியிருப்பதாவது:

நான் பகிர்ந்த பதிவிற்கு பாஜகவினர் தவறான விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். அந்த பதிவு ஹிட்லரின் சர்வாதிகாரத்தினை குறிக்கும் விதமாகவே உள்ளது. பாஜகவினர் முதலில் நாஜி சின்னத்திற்கும், இந்து சின்னத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தினை புரிந்து கொள்ள வேண்டும். இது முட்டாள் தனமான செயலாகும். நாஜி சின்னத்தை தங்கள் சின்னமாக கூறுவது பாஜகவின் அறியாமையை குறிக்கிறது.

இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார். #AAP #AravindKejriwal #BJP 







 
Tags:    

Similar News