செய்திகள்

தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானம் - மத்திய மந்திரி தகவல்

Published On 2018-12-01 03:29 GMT   |   Update On 2018-12-01 03:29 GMT
தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #JayantSinha #Drones #Organs
புதுடெல்லி:

மத்திய விமானத்துறை மந்திரி ஜெயந்த் சின்கா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து நெருக்கடியில் குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்வது சவாலான பணியாக இருக்கிறது.



எனவே உடல் உறுப்புகளை ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஒரு மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குட்டி விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அதை இறக்குவதற்கும் தேவையான வசதிகளை ஆஸ்பத்திரிகளில் முதலில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். #JayantSinha #Drones #Organs

Tags:    

Similar News