செய்திகள்

வைர வியாபாரி மெகுல் சோக்‌சியின் கூட்டாளி தீபக் குல்கர்னி கைது

Published On 2018-11-06 07:55 GMT   |   Update On 2018-11-06 07:55 GMT
வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சியின் கூட்டாளி தீபக் குல்கரினியை கொல்கத்தா விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். #MehulChoksi #DeepakKulkarni #ED
கொல்கத்தா:

பஞ்சாப் நேசனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்மோசடி விவகாரம் தொடர்பாக வைர வணிகர்கள் நீரவ் மோடி, மெகுல்சோக்சி உள்ளிட்டோரை, சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய, மெகுல்சோக்சியின் கூட்டாளியான தீபக் குல்கர்னியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.



பஞ்சாப் நேசனல் வங்கி கடன்மோசடி வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த இவர், ஹாங்காங்கில் உள்ள மெகுல்சோக்சியின் போலி நிறுவனத்தின் இயக்குநராக செயல்படுகிறார்.

முன்னதாக இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட தீபக் குல்கர்னியிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #MehulChoksi #DeepakKulkarni #ED
Tags:    

Similar News