செய்திகள்

தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Published On 2018-10-06 22:58 GMT   |   Update On 2018-10-06 22:58 GMT
கடைசி நிமிடத்தில் மோடிக்கு வசதியாக செய்தியாளர் சந்திப்பு நேரத்தை தேர்தல் கமிஷன் மாற்றி அமைத்தது என தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. #Congress #AAP #ElectionCommission
புதுடெல்லி:

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் டெல்லியில் நேற்று மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் இந்த சந்திப்பு பின்னர் திடீரென பிற்பகல் 3 மணிக்கு மாற்றப்பட்டது.



இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில், “மோடி பகல் 1 மணிக்கு ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு வசதியாக தேர்தல் கமிஷன் செய்தியாளர்கள் சந்திப்பை பிற்பகல் 3 மணிக்கு மாற்றிவிட்டது. இதுவா? தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்படும் லட்சணம்?” என்று குற்றம் சாட்டினார்.

இதேபோல் ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் கூறுகையில், “கடைசி நிமிடத்தில் தேர்தல் கமிஷன் எதனால் செய்தியாளர் சந்திப்பு நேரத்தை மாற்றியது?...தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தானில் பிரதமர் மோடி சலுகைகளை அறிவிப்பதற்கு வசதியாகத்தானே இப்படி மாற்றினர்?... தலைமை தேர்தல் கமிஷன், மோடி, நாட்டு மக்கள் இந்த மூவரில் இதற்கு யார் வெட்கப்படவேண்டும்?” என்று கேலி செய்துள்ளார். #Congress #AAP #ElectionCommission
Tags:    

Similar News