செய்திகள்

பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார் - இம்ரானுக்கு மோடி கடிதம்

Published On 2018-08-20 09:02 GMT   |   Update On 2018-08-20 09:02 GMT
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். #Modi #Imrankhan
புதுடெல்லி:

பாகிஸ்தான் நாட்டின் 22-வது பிரதமராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கடந்த 17-ம் தேதி பதவியேற்றார். அவரது தலைமையில் 21 மந்திரிகள் அடங்கிய மந்திரிசபை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 16 மந்திரிகள் இன்று பதவி ஏற்றுகொண்டனர்.



இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அண்டைநாடான பாகிஸ்தானுடன் அமைதிப்பாதையிலான நல்லுறவை இந்தியா விரும்புவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மோடி, தெற்காசிய கண்டத்தை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுவித்தாக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார். #Modi #Imrankhan

Tags:    

Similar News