செய்திகள்

கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யரை தற்காலிகமாக நீக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார் ராகுல் காந்தி

Published On 2018-08-18 20:12 GMT   |   Update On 2018-08-18 20:12 GMT
பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசியதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யர் தற்காலிக நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை கட்சி தலைவர் ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார். #AICC #RahulGandhi #ManiShankarAiyar
புதுடெல்லி :

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. மாநிலத்தின் பிரதான கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவியதால் இரு கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

அப்போது, காங்கிரஸ் சார்பாக தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடி கீழ்த்தரமான மனிதர். அவர் பண்பட்டவர் அல்ல. இந்த நேரத்தில் அவர் தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி குறித்த மணிசங்கர் அய்யரின் தரக்குறைவான பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால், பிரதமரை பற்றிய மணிசங்கர் அய்யரின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் விடுத்த காங்கிரஸ், அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தவு பிறப்பித்தது.

இந்நிலையில், மணிசங்கர் அய்யர் மீதான தற்காலிக நீக்கத்தை ரத்து செய்து தலைமைக்கு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்தது. இதற்கு, கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் வழங்கியுள்ளதாக பொதுச்செயலாளர் அஷோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AICC #RahulGandhi #ManiShankarAiyar

Tags:    

Similar News