செய்திகள்

பாஜகவின் பாதையை பின்பற்றி இருந்தால் ஜனநாயகம் என்றோ அழிந்திருக்கும் - காங்கிரஸ்

Published On 2018-07-20 14:01 GMT   |   Update On 2018-07-20 14:01 GMT
பாஜகவின் பாதையை நாங்கள் பின்பற்றி இருந்தால் ஜனநாயகம் என்றைக்கோ அழிந்திருக்கும் என நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். #NoConfidenceMotion
புதுடெல்லி:

மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

70 வருடங்களாக 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று மத்திய அரசு சொல்கிறது. இந்தியா முழுவதும் 6,23,000 கிராமங்கள் உள்ளது. நீங்கள் 4 வருடங்களில் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொடுத்து இருந்தாலும், நாங்கள் 6 லட்சம் கிராமங்களுக்கு மின்சார வசதியை செய்துக் கொடுத்தோம். இது வளர்ச்சி கிடையாதா?. 

பா.ஜ.க எங்களுடைய பணியை ஒருபோதும் அங்கீகரித்தது கிடையாது எங்களுக்கு பாடம் எடுக்கக்கூடாது. பா.ஜ.க முதலில் தன்னுடைய குறையை பார்த்துக் கொள்வது கிடையாது.
 
நாங்கள் உங்களுடைய பாதையை பயன்படுத்தியிருந்தால் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே ஜனநாயகம் அழிந்து இருக்கும். காங்கிரஸ் எப்போதுமே ஜனநாயகத்தை பாதுகாக்கவே முயற்சிகளை மேற்கொண்டது.  பா.ஜ.க அரசு அதானி மற்றும் அம்பானி பற்றி பேசுகிறது. ஆனால், விவசாயிகள் குறித்து பேசுவது கிடையாது. 

நீங்கள் இந்து கடவுள் ராமர் மற்றும் கிருஷ்ணா பற்றி பேசுகிறீர்கள். ஆனால், மகாபாரத்தில் உள்ள பிறரை பற்றி பேசுவது கிடையாது. 

என அவர் பேசினார்.
Tags:    

Similar News