செய்திகள்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் குமாரசாமி சந்திப்பு

Published On 2018-06-18 06:48 GMT   |   Update On 2018-06-18 06:48 GMT
கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். #KarnatakaCM #KumaraswamyMetRahul
புதுடெல்லி:

கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சாப்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டணி ஒப்பந்தத்தின்படி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன்பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் குமாரசாமி இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கர்நாடக மாநில விவகாரம் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தனிஷ் அலி, காங்கிரஸ் கட்சியின் வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை குமாரசாமி சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  #KarnatakaCM #KumaraswamyMetRahul 
Tags:    

Similar News