செய்திகள்

டிரைவர் செல்போன் பேசியபடி ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டது - உயிர் தப்பிய மாணவன் பேட்டி

Published On 2018-04-26 17:18 GMT   |   Update On 2018-04-26 17:18 GMT
உத்தர பிரதேசம் மாநிலத்தில் ரெயில்வே கிராசிங்கில் நடைபெற்ற விபத்துக்கு, டிரைவர் செல்போனில் பேசியபடி வேன் ஓட்டியதே காரணம் என உயிர் தப்பிய மாணவர் தெரிவித்துள்ளார். #UPVanTrainCollision
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி மாணவர்கள் பயணம் செய்த வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழித்தடத்தில் வேகமாக வந்த ரெயில், பள்ளி வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த 13 மாணவர்கள் உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், உ.பி. ரெயில்வே கிராசிங்கில் நடைபெற்ற விபத்துக்கு, டிரைவர் செல்போனில் பேசியபடி வேன் ஓட்டியதே காரணம் என உயிர் தப்பிய மாணவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, விபத்தில் உயிர் தப்பிய மாணவர் கிருஷ்ண வர்மா கூறுகையில், தண்டவாளத்தில் ரெயில் வருவதை பார்த்த நாங்கள் டிரைவரிடம் வண்டியை நிறுத்துமாறு கத்தினோம். ஆனால் அவர் செல்போன் பேசியபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் கத்தியதை கவனிக்கவில்லை என்பதால் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது என சோகத்துடன் தெரிவித்துள்ளார். #UPVanTrainCollision #Tamilnews
Tags:    

Similar News