செய்திகள்

வளர்ச்சி திட்டங்களுக்கு உலக வங்கியில் இருந்து ரூ.825 கோடி கடன்: மத்திய அரசு ஒப்பந்தம்

Published On 2018-04-26 00:23 GMT   |   Update On 2018-04-26 00:23 GMT
உள்நாட்டு கண்டுபிடிப்பு, உற்பத்தி உள்ளடக்கிய திட்டங்களுக்காக உலக வங்கியிடம் சுமார் ரூ.825 கோடி கடன் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

உள்நாட்டு கண்டுபிடிப்பு, உற்பத்தி மற்றும் வணிக மயமாக்கல் நடைமுறையை ஊக்குவிக்கும் நோக்கிலான பல்வேறு உள்ளடக்கிய திட்டங்களுக்காக உலக வங்கியிடம் 125 மில்லியன் டாலர் (சுமார் ரூ.825 கோடி) நிதியை இந்தியா கடன் வாங்குகிறது.டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சக இணை செயலாளர் சமீர் குமார் காரேயும், உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குனர் (பொறுப்பு) ஹிசாம் அப்டோவும் கையெழுத்து போட்டனர்.

நாட்டின் முக்கியமான திறன் மற்றும் உள்கட்டமைப்பு இடைவெளிகளை இணைக்கவும், வளர்ச்சிக்கான புதுமையான சுகாதார திட்ட தயாரிப்பு மற்றும் போட்டித்திறன் அதிகரிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய திட்டங்களுக்காக இந்த நிதி செலவிடப்படும். இந்த திட்டங்களுக்கான நிறைவு தேதி 2023-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி ஆகும்.

இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News