செய்திகள்

நாராயன் நாராயன் - ரீ ட்வீட் செய்து சிக்கலில் மாட்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

Published On 2018-04-25 09:15 GMT   |   Update On 2018-04-25 13:33 GMT
பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தண்டிக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபு உடன் பிரதமர் மோடி பங்கேற்ற பழைய வீடியோ நிகழ்ச்சியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து பின்னர் அதனை நீக்கியது. #ICC
புதுடெல்லி:

ராஜஸ்தான், குஜராத் என பல மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த ஆசாராம் பாபு சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இன்று குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து, பத்திரிக்கையாளர் ப்ரதிக் சின்ஹா என்பவர், பிரதமர் மோடியுடன் ஆசாராம் பாபு இருக்கும் பழைய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.



சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ட்விட்டர் பக்கத்தில் பிரதிக் சின்ஹாவின் பதிவு ‘நாராயன் நாராயன்’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கு பலரும் கிண்டலாக பதில்களையும் அளித்தனர்.

சிறிது நேரத்திற்கு பின்னர் ஐ.சி.சி ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ஐ.சி.சி, ‘கிரிக்கெட் அல்லாத ட்வீட் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அந்த நிகழ்வுக்கான மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளது.
#ICC #Asaramconvicted
Tags:    

Similar News