செய்திகள்

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Published On 2018-03-27 01:06 GMT   |   Update On 2018-03-27 01:06 GMT
புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
புதுடெல்லி:

புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆளும் காங்கிரஸ் கட்சி, 3 பேரின் நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 3 பேரின் நியமனமும் செல்லும் என அதிரடியாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று முறையிடப்பட்டது.

ஆனால் இந்த முறையீட்டை ஏற்றுக்கொள்ளாத தலைமை நீதிபதி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். மேலும் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக கூறினார். இதனால் இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.  #Tamilnews 
Tags:    

Similar News