செய்திகள்

ஈராக்கில் இந்தியர்கள் கொலை: மத்திய அரசை குறை கூறிய சசி- பதிலடி கொடுத்த மத்திய மந்திரி

Published On 2018-03-20 11:00 GMT   |   Update On 2018-03-20 11:00 GMT
ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குறை கூறினார்.
புதுடெல்லி:

ஈராக்கில் பயங்கரவாதிகளால் 2014-ம் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டதாக பாராளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது. இதுவரை அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று மத்திய அரசு கூறிய ஆறுதல் வார்த்தையை அவர்களின் குடும்பத்தினர் நம்பியிருந்தனர். தற்போது, அந்த நம்பிக்கை தகர்ந்ததால், உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குறை கூறியுள்ளார். ‘கடத்தப்பட்ட அனைவரும் உயிருடன் இருப்பார்கள் என்று மக்களுக்கு பொய்யான தகவலை கொடுப்பது உண்மையில் கொடுமையானது. சொந்தங்களை இழந்து வாடும் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார் சசி தரூர்.

சசி தரூரின் கருத்துக்கு மத்திய மந்திரியும் அகால தளம் எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் அரசியல் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

‘கடத்தப்பட்டவர்களில் ஒருவராவது உயிருடன் இருக்கமாட்டார்களா என்பதை சரிபார்க்க அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுத்தது. அவர்களை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். சரியான ஆதாரம் கிடைத்தபிறகே இறந்ததை உறுதி செய்து அறிவித்தார்’ எனவும் பாதல் குறிப்பிட்டார்.

ஈராக்கில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். #Tamilnews
Tags:    

Similar News