செய்திகள்

கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்த வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Published On 2018-03-13 19:18 GMT   |   Update On 2018-03-13 19:18 GMT
வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப்படத்தை பத்திரிகைகளில் வெளியிட்டு அசிங்கப்படுத்துமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப் படங்களையும், இதர விவரங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு அசிங்கப்படுத்துமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதலுடன் இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு வங்கிகளுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

கடனை திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தும், செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி விட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 50 கோடி என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. 
Tags:    

Similar News