செய்திகள்

ரூ.50 கோடிக்கு மேல் வங்கிக் கடன் வாங்குபவர்கள் பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட வேண்டும்

Published On 2018-03-10 11:55 GMT   |   Update On 2018-03-10 11:55 GMT
வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் 50 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வங்கிக் கடன் வாங்குபவர்கள் இனி பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #passport #borrowers
புதுடெல்லி:

அரசுக்கு சொந்தமான வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான கடன்களை வாங்கி, திருப்பி செலுத்த தவறிய விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட பிரபல தொழிலதிபர்கள் திடீரென்று வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இவர்களை இந்தியாவுக்கு அழைத்துவந்து கடன் தொகையை வசூலிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், பொதுமக்கள் பணத்தை சுரண்டிவிட்டு, கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக் கடன் வாங்குபவர்கள் இனி பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் இனி வழங்கப்படும் கடன் விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிடும் பகுதியும் இணைக்கப்பட வேண்டும் என பொதுத்துறை வங்கிகளுக்கான மத்திய நிதி அமைச்சக செயலாளர் ராஜிவ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிடுவதால் கடன்களை வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல நினைக்கும் மோசடிக்காரர்களை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை வங்கி அதிகாரிகள் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #tamilnews #passport #borrowers
Tags:    

Similar News