தமிழ்நாடு

வெடி விபத்தால் 40 வீடுகளில் விரிசல்

Published On 2024-05-02 05:49 GMT   |   Update On 2024-05-02 05:49 GMT
  • பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  • குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கீழஉப்பிலிக்குண்டு நடந்த குவாரி வெடி விபத்தின் அதிர்வு அருகில் உள்ள கிராமங்களில் உணரப்பட்டது.வெடி விபத்து நடந்தபோது லேசான அதிர்வு இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் என்ன நடந்தது? என பொதுமக்களால் உடனடியாக உணர முடியவில்லை. அந்த கிராமத்தில் மட்டும் பல வீடுகளின் சுவர்கள் சேதமடைந்தன.

மேலும் ஆவியூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நடந்த வெடி விபத்தால் 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்டதில் இருந்து சில நிமிடம் காது கேட்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

வெடி விபத்து நடந்த குவாரியில் தினமும் இரவு பகலாக வெடி சத்தம் கேட்டு கொண்டே இருக்கும் இதனால் நாங்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே இந்த குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News