search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் மல்லையா"

    • அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார்.
    • அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    புதுடெல்லி :

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களைப் பெற்றுவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தவில்லை.

    அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார். அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    அவரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் நடவடிக்கை மும்பை தனிக்கோர்ட்டில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு தடை கோரி விஜய் மல்லையா தரப்பில் மும்பை ஐகோர்ட்டை நாடினார். அங்கு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    உடனே அவர் தரப்பில் 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே கோர்ட்டு இடைக்கால தடை எதுவும் விதிக்காத நிலையில், விஜய் மல்லையாவை 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி மும்பை தனிக்கோர்ட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது.

    இப்படி அறிவிக்கிறபோது, அவரது சொத்துகளை பறிமுதல் செய்கிற அதிகாரம், வழக்கு தொடுக்கிற புலனாய்வு அமைப்புக்கு வந்து விடுகிறது.

    இந்த நிலையில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, ராஜேஷ் பிண்டல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக தான் விஜய் மல்லையாவிடம் இருந்து எந்த அறிவுறுத்தல்களையும் பெறவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து அவரது மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    • கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
    • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்று கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது

    புதுடெல்லி:

    பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றார். 2016-ம் ஆண்டில் இருந்து அவர் லண்டனில் உள்ளார்.

    இதற்கிடையே வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என்று விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    ஆனால் கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்று கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி விஜய் மல்லையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு 2020-ம்ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

    மேலும் அவர் கோர்ட்டில் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு பலமுறை வாய்ப்பளித்தது. ஆனால் விஜய் மல்லையா ஆஜராகவில்லை.

    இந்த வழக்கு கடந்த மார்ச் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது.

    அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி லலித் தலைமையிலான பெஞ்ச் விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை அறிவித்தது.

    அதில், கோர்ட்டில் தகவல் தெரிவிக்காமல் விஜய் மல்லையா தனது குடும்ப உறுப்பினர்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக அவருக்கு 4 மாத சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

    ரூ.317 கோடியை வட்டியுடன் அவர் திருப்பி செலுத்த வேண்டும். அத்தொகையை திருப்பி செலுத்தாத பட்சத்தில் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நாட்டை விட்டு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் மல்லையாவும், அருண் ஜெட்லியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்க்கலாம் என காங்கிரஸ் எம்.பி புனியா கூறியுள்ளார். #VijayMallya #ArunJaitley
    புதுடெல்லி:

    பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

    நேற்று கோர்ட்டில் ஆஜரான விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். ஆனால், அருண் ஜெட்லி இதனை மறுத்திருந்தார். மல்லையாவின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டதால் இந்த விவகாரம் பரபரப்பு அடைந்தது.

    இதனால், அருண் ஜெட்லியை மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், நாட்டை விட்டு மல்லையா வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பாராளுமன்ற மத்திய ஹாலில் அருண் ஜெட்லியும், மல்லையாவும் 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததாக காங்கிரஸ் எம்.பி புனியா இன்று தெரிவித்துள்ளார்.

    சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தால் அது உண்மை என தெரியவரும் எனவும் புனியா கூறியுள்ளார். 
    நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். #VijayMallaya #ArunJaitley
    லண்டன்:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான விஜய் மல்லையா “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.

    இந்நிலையில், விஜய் மல்லையா கூற்று தொடர்பாக அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால், பாராளுமன்றத்தில் அவரை சந்தித்ததுண்டு. 

    பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு பாராளுமன்ற வளாகத்தில் என்னிடம் ஒருமுறை உதவிகோரினார். தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறித்தினேன். எம்.பி., பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியுள்ளார். 

    இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    வங்கி மோசடி விவகாரத்தில் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. #VijayMallaya
    லண்டன்:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது மும்பை ஆர்தர் சாலை சிறையின் வீடியோவை லண்டன் கோர்ட் நீதிபதி கேட்டதன் பேரில், இந்தியா தாக்கல் செய்தது.

    இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மல்லையா ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறினார்.

    “என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். எனினும், கோர்ட் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” எனவும் மல்லையா குறிப்பிட்டார்.

    முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, “சிபிஐ கொடுத்த நிர்பந்தம் காரணமாகவே மல்லையா மீது வங்கிகள் புகார் அளித்தது” என மல்லையா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.  

    வழக்கு விசாரணை முடிந்த பின்னர், நாடு கடத்தக்கோரும் வழக்கின் மீதான தீர்ப்பு டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். 
    ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டியை நேரில் பார்ப்பதற்காக விஜய் மல்லையா மைதானத்துக்கு வந்திருந்தார். #ENGvIND #VijayMallya #OvalTest
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. வங்கிக்கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, மைதானத்துக்கு வருகை தந்து போட்டியை நேரில் கண்டு களித்தார்.

    மல்லையாவின் சொத்துக்களை முடக்கவும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும், சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் அடிப்படையில் மும்பை கோர்ட்டிலும் அவர் மீது நடக்கும் வழக்கில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையாவை அறிவிக்கக்கோரும் வழக்கில் அவர் மூன்று வாரங்களில் பதிலளிக்க மும்பை சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VijayMallya #Mallya
    மும்பை:

    தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் பாக்கி வட்டியுடன் சேர்த்து ரூ. 9,990.07 கோடியாக இருக்கிறது. இதனை செலுத்தாமல் அவர் நாட்டை விட்டு தப்பி ஓடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை நாடுகடத்தவும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அந்நாட்டு கோர்ட்டிலும் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

    தலைமறைவு பொருளாதார குற்றவாளி என அறிவிக்கக்கோரும் வழக்கில் தான் பதிலளிக்க அவகாசம் தர வேண்டும் என விஜய் மல்லையா தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 24-ம் தேதி வரை பதிலளிக்க மல்லையாவுக்கு அவகாசம் தந்து வழக்கை ஒத்தி வைத்தார். 
    வங்கி மோசடி வழக்கில் லண்டனில் விசாரணையை எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா இன்று கோர்ட்டில் ஆஜரான நிலையில், செப்டம்பர் 12 வரை அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. #VijayMallya
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்திய வங்கிகள் தொடர்ந்த மற்றொரு வழக்கில் பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் கடந்த முறை உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் இன்று வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார். முதன்முறையாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கேற்றனர்.

    விசாரணையின் இறுதியில் செப்டம்பர் 12-ம் தேதி வரை மல்லையாவுக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார். அதே தேதியில் வழக்கின் விசாரணை நடக்கும் என்றும் அன்றைய தினம் மல்லையா ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையின் வீடியோ தனக்கு வேண்டும் என நீதிபதி இந்திய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால், விரைவில் அவர் நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னாதாக வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், ‘என் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யானவை’ என மல்லையா தெரிவித்தார்.
    வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பிரிட்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VijayMallya
    லண்டன்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில், பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இதன் மூலம், மல்லையா தற்போது தங்கியுள்ள பங்களா உள்பட அனைத்து சொத்துக்களிலும் பிரிட்டன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியும். முன்னதாக, கடந்த மே மாதம் மல்லையாவுக்கு சொந்தமாக உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.
    ×