செய்திகள்

கர்நாடகாவில் பசுவதைக்கு முற்றிலும் தடை கோரி பிரதமர் மோடி, சித்தராமையாவுக்கு ரத்த கடிதம்

Published On 2018-01-22 07:06 GMT   |   Update On 2018-01-22 07:06 GMT
கர்நாடகாவில் பசுவதை தடையை முற்றிலும் அமல்படுத்த வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் சித்தராமையாவுக்கு ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
மங்களூரு:

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பாரதிய கயு பரிவார் அமைப்பினர் பசு பாதுகாப்பு அமைப்பை நடத்திவருகின்றனர். ராமச்சந்திரபுர மடத்தை சேர்ந்த இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோருக்கு ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

அதில் தெற்கு கன்னட மாவட்டத்தில் பசுவதை தடையை முற்றிலும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 500 பசு பாதுகாவலர்களால் இதுபோன்று ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.



கடிதங்கள் எழுத பசு பாதுகாவலர்களின் உடலில் இருந்து தலா 3 மி.லி ரத்தம் ஊசிமூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டது. பின்னர் அது உறையாமல் இருக்க ரசாயன திரவம் கலக்கப்பட்டு பேனாவில் ஊற்றி கடிதம் எழுதப்பட்டது என பாரதிய கயு பரிவார் அமைப்பின் உறுப்பினர் ரவீஸ் பட் தெரிவித்தார்.

மேலும், கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா முழுவதும் 70 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறவும், 1 கோடி ரத்த கடிதம் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News