செய்திகள்

2ஜி தீர்ப்பு: முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீய பரப்புரை முடிவுக்கு வந்துள்ளது - மன்மோகன் சிங்

Published On 2017-12-21 07:21 GMT   |   Update On 2017-12-21 07:21 GMT
2 ஜி வழக்கின் தீர்ப்பு முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீய பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

2 ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்தார்.  இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீய பரப்புரை முடிவுக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 ஜி வழக்கில் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை மதிக்கிறேன். இந்த தீர்ப்பு மூலம் முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீய பரப்புரை முடிவுக்கு வந்துள்ளது. மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பிரிக்கும் மிகப்பெரிய பிரசாரம் முறியடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News