செய்திகள்

அசாமில் கிராம பாதுகாப்பு படை தலைவர் - மகன் மர்மநபர்களால் சுட்டுக்கொலை

Published On 2017-12-11 23:52 GMT   |   Update On 2017-12-11 23:52 GMT
அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தை சேர்ந்த் கிராம பாதுகாப்பு படை தலைவர் மற்றும் அவரது மகனை சில மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர்.
கவுஹாத்தி:

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்திற்குட்பட்ட ஜகுன் கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம பாதுகாப்பு படை தலைவராக அந்தேஸ்வர் மஹந்தா என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் ராணுவத்தினரை போல உடையணிந்த சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் அவரது வீட்டிற்குள்  நுழைந்தனர்.

அந்த நபர்கள் அந்தேஸ்வர் மஹந்தாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்தேஸ்வர் மற்றும் அவரது மகன் கரண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவரகள் தின்சுகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர், இருவரும் உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த கரண், அசாம் ஐக்கிய மாணவர் சங்கத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Tags:    

Similar News