செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது துப்பாக்கி சூடு: சுஷ்மாவின் உதவியை நாடும் பெற்றோர்

Published On 2017-12-10 15:11 GMT   |   Update On 2017-12-10 15:11 GMT
அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர் மர்ம நபரால் சுடப்பட்டதையடுத்து, அமெரிக்கா சென்று தன் மகனை பார்க்க உதவி செய்யும்படி வெளியுறவுத்துறை மந்திரிக்கு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐதராபாத்:

ஐதராபாத் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 30). இவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரில் உள்ள டெவ்ரி பல்கலைகழகத்தில் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நெட்வொர்க்கிங் மற்றும் டெலிகம்யூனிகேசன்ஸ் படித்து வருகிறார்.  இவர் நேற்று சிகாகோவின் அல்பேனி பார்க் அருகில் நடந்து சென்றபோது, அவரை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டான். இதில், பலத்த காயமடைந்த முகமது அக்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவரது தந்தை கூறுகையில், “சிகாகோவில் உள்ள பூங்கா அருகே தனது காரை எடுக்க சென்ற போது அக்பரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் என் மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனது மகனை பார்க்க நாங்கள் அமெரிக்கா செல்வதற்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அவசர விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக இந்தியர்களை குறிவைத்து தாக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News