செய்திகள்

அருணாச்சல்: சோதனைக்காக 88 மாணவிகளின் உடைகளை கழற்ற கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள்

Published On 2017-11-30 03:01 GMT   |   Update On 2017-11-30 03:01 GMT
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சோதனை என்ற பெயரில் மற்ற மாணவர்கள் முன்னே 88 மாணவிகளை உடைகளை கழற்ற ஆசிரியர்கள் நிர்பந்தித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இடாநகர்:

அருணாச்சல பிரதேசம் மாநிலம் பாபும் பரே மாவட்டத்தில் உள்ள தானி ஹப்பா என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த 23-ம் தேதி 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் சோதனை என்ற பெயரில் ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுதியுள்ளனர்.

தலைமை ஆசிரியரை பற்றி அவதூறான வார்த்தைகள் எழுதப்பட்ட பேப்பரை கண்டறிவதற்காக மூன்று ஆசிரியர்கள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். மற்ற மாணவர்கள் முன்னிலையில் ஆடைகளை கழற்ற ஆசிரியர்கள் நிர்பந்தித்துள்ள சம்பவம் வெளிவந்த நிலையில், இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி சார்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்துள்ள போலீசார் மாணவிகளின் புகாரில் உண்மை இருக்கிறது என்று கூறியுள்ளனர். 
Tags:    

Similar News