செய்திகள்

கேரளா: எரிபொருள் கிடங்கில் விபத்துக்குள்ளான கடற்படை கண்காணிப்பு விமானம்

Published On 2017-11-21 10:28 GMT   |   Update On 2017-11-21 10:28 GMT
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான ஆளில்லாத சிறிய ரக கண்காணிப்பு விமானம் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படைத்தளம் உள்ளது. கடலோர பகுதிகளை கண்காணிப்பதற்காக இந்த தளத்தில் இருந்து ரிமோட் மூலம் இயங்கும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று காலை ஆளில்லாத விமானம் ஒன்று வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.

பறந்து கொண்டிருந்த விமானமானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வெலிங்டன் தீவில் கீழே விழுந்தது. இந்த தீவினில், பெட்ரோல், டீசல், எத்தனால் போன்ற தீப்பிடிக்கக்கூடிய எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் உள்ளது. இதனையடுத்து, உடனடியாக அங்கு சென்ற கடற்படை அதிகாரிகள் விமானத்தை பாதுகாப்பாக மீட்டனர்.

ஒழுங்கற்ற கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக விமானம் பறக்கும் தன்மையை இழந்ததாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இந்த விபத்தினால் வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News