செய்திகள்

அமித்ஷா மகன் பிரச்சினையை திசைதிருப்பவே தாஜ்மகால் சர்ச்சையை பாஜக உருவாக்கி வருகிறது: கண்ணையா குமார்

Published On 2017-10-23 19:42 GMT   |   Update On 2017-10-23 19:42 GMT
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மகன் பிரச்சினையை திசைதிருப்பவே, தாஜ்மகால் குறித்த சர்ச்சையை பா.ஜ.க. உருவாக்கி வருகிறது என கண்ணையா குமார் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்:

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மகன் பிரச்சினையை திசைதிருப்பவே, தாஜ்மகால் குறித்த சர்ச்சையை பா.ஜ.க. உருவாக்கி வருகிறது என டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு வந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகனது நிறுவனம் அடைந்த லாபம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே தாஜ்மகால் தொடர்பான சர்ச்சையை பா.ஜ.க. உருவாக்கி உள்ளது.
 
குஜராத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருகிறது.

வரும் காலங்களில் நான் அரசியலில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. ஆனால், நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஏஜெண்ட் இல்லை.

ஜி.எஸ்.டி வரி மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற அரசின் நடவடிக்கைகள், பெரிய வியாபாரிகளால் சிறிய வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News