செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மக்கள் அரசாக மத்திய அரசு செயல்படுகிறது: அமித் ஷா

Published On 2017-10-04 14:57 GMT   |   Update On 2017-10-04 14:57 GMT
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது என அமித் ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி:

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை நேற்று மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான சில்லரை விற்பனை விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வரி குறைப்பு செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

உற்பத்தி வரி குறைப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு தலா ரூ.2 குறைகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இந்த முடிவை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா வரவேற்றுள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வேதச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் அதனை குறைக்கும் வகையில் அரசு முடிவெடுத்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு பிரதமர் மோடி அரசானது முக்கியத்துவம் அளித்து வருவதனை இது வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News