செய்திகள்

தால் ஏரியில் இருந்து குப்பை அகற்றிய பிலால் தர்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

Published On 2017-09-25 01:28 GMT   |   Update On 2017-09-25 01:28 GMT
ஜம்மு-காஷ்மீரின் தால் ஏரியில் இருந்து 12,000 கிலோ குப்பைகளை அகற்றிய பிலால் தர் என்ற வாலிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரின் தால் ஏரியில் இருந்து 12,000 கிலோ குப்பைகளை அகற்றிய பிலால் தர் என்ற வாலிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிலால் தர் (18). இவர் கடந்த 5 ஆண்டுகளாக தால் ஏரியில் இருந்து குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு சேகரித்த குப்பைகளை விற்று ரூ.150 முதல் 200 வரை வருமானம் ஈட்டி வந்தார். பிலால் தர் இதுவரையிலும் சுமார் 12,000 கிலோ குப்பைகளை அகற்றியுள்ளார்.



இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீநகர் நகராட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், குடிமைத் தூதர் என்ற பொறுப்பையும் பிலாலுக்கு வழங்கியது. சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த சீருடையும், பிரச்சார வாகனமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆல் இந்தியா ரேடியோவில் நேற்று ஒலிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தனது சொந்த முயற்சியால் தால் ஏரியிலிருந்து 12,000 கிலோ குப்பைகளை அகற்றிய பிலால் தருக்கு பாராட்டு தெரிவித்தார். இதைதொடர்ந்து பிலால் தருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Tags:    

Similar News