செய்திகள்

எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வர் மவுரியா

Published On 2017-09-21 10:38 GMT   |   Update On 2017-09-21 11:11 GMT
உ.பி.யில் முதல்வர் ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் மவுரியா ஆகியோர் சட்ட மேலவைக்கு தேர்வு செய்யப்பட்டதையடுத்து, இருவரும் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து, பாராளுமன்ற மக்களவை உறுப்பினரான யோகி ஆதித்யநாத் உ.பி.யின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். இதேபோல் மற்றொரு எம்.பி. கேசவப் பிரசாத் மவுரியா துணை முதல்வராக பதவியேற்றார். இருவரும் 6 மாதத்திற்குள் சட்டமன்றத்திற்கு முறைப்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், கடந்த வாரம் இருவரும் சட்ட மேலவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து, யோகி ஆதித்யநாத் மற்றும் கேசவப் பிரசாத் மவுரியா ஆகியோர் இன்று தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். தங்கள் ராஜினாமா கடிதங்களை மக்களவை செயலகத்தில் ஒப்படைத்திருப்பதாக, செயலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆதித்யநாத் கோரக்பூர் மக்களவைத் தொகுதியிலும், மவுரியா அலகாபாத்தின் பல்பூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். இவர்களின் ராஜினாமா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், அந்த தொகுதிகளில் இடைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
Tags:    

Similar News