செய்திகள்

கர்நாடகா: நீர்வீழ்ச்சியில் மூழ்கி 6 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி

Published On 2017-09-17 22:24 GMT   |   Update On 2017-09-17 22:24 GMT
கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகர்மாடி நீர்வீழ்ச்சியில் மூழ்கிய 4 இளம்பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் இரண்டு பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெங்களூர்:

கோவா  மாநிலம், மதுகான் பகுதியை சேர்ந்த 50 பேர் நேற்று காலை கார்வார் மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை  சுற்றிப்பார்த்த இக்குழுவினர் கடைசியாக கார்வதர் புறநகர் பகுதியில் உள்ள நாகரமாடி நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது கனமழை பெய்ததால் நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் 6 பேர் நீரில் சிக்கிக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்குழுவை சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 2 இளம்பெண்களை சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது. மற்றவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதுத்தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனே கார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக மீட்கபட்ட இளம்பெண்கள் பயோஜா(21) மற்றும் பிரன்ஷிலா(21) என்பதும், மெப்ஷிகா(20), ரேணுகா(21) மற்றும் சிந்துஷாரி  வாஸ்கோ(21), சமீர் (21) ஆகியோர் நீரில் அடித்து செல்லப்பட்டதும் தெரியவந்தது.

தீயணைப்புபடை வீரர்களுடன் போலீசார் இணைந்து சடலங்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News