செய்திகள்

ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணம்

Published On 2017-09-04 23:11 GMT   |   Update On 2017-09-04 23:12 GMT
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா மூன்று நாள் சுற்றுப் பயணமாக வருகிற 6-ம் தேதி ஒடிசா மாநிலத்திற்கு செல்கிறார்.
புபனேஸ்வர்:

நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஒடிசா மாநிலத்தில் 2019ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வை பலப்படுத்தும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் அம்மாநிலத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மீண்டும் அம்மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய அமித்ஷா முடிவு செய்துள்ளார். அவர், வருகிற 6-ம் தேதி ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் பசந்த் பண்டா தெரிவித்தார்.

சுற்றுப்பயணம் குறித்து அவர் கூறியதாவது:-

சுற்றுப்பயணத்தின் முதல்நாளின் போது ஒடிசா மாநிலத்தில் கட்சி வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். அன்று மாலை கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.

இரண்டாம்நாள் பயணத்தில் போது புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார். அடுத்த நாள் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் அன்று மாலையே டெல்லி திரும்புகிறார்.
Tags:    

Similar News