செய்திகள்

கோவா, டெல்லி, ஆந்திர மாநில சட்டசபை இடைத்தேர்தல்கள்: இறுதி வாக்குப்பதிவு சதவீதங்கள்

Published On 2017-08-23 18:50 GMT   |   Update On 2017-08-23 18:50 GMT
ஆந்திர மாநிலம் நந்தியாலில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அதிகளவாக 80 சதவீதமும், டெல்லி பவானா தொகுதியில் குறைந்த அளவாக 45 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லி, ஆந்திர மாநிலத்தின் நந்தியால் தொகுதி மற்றும் கோவாவில் பணாஜி மற்றும் வால்போய் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7
மணியளவில் முடிவடைந்தது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நந்தியால் தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதேபோல், கோவாவின் பணாஜி தொகுதியில் 70 சதவீதமும், வால்போய் தொகுதியில் 79.80 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. கோவா மாநிலத்தின் பணாஜி சட்டப்பேரவைத் தொகுதியில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் வாக்களித்தார்.



தலைநகர் டெல்லியின் பவானா தொகுதியில் 45 சதவீத வாக்குகள் பதிவாகின. பவானா தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகின்றது.

இன்று நடந்த சட்டசபை தொகுதி தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும், டெல்லி, ஆந்திரா, கோவாவின் சில தொகுதிகளில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் மெஷின்கள் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News