search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bypolls"

    • வாக்குப் பதிவின்போது முறைகேடு நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசமிருந்த தொகுதியை கைப்பற்றியது பா.ஜனதா

    திரிபுராவில் உள்ள தன்புர், போக்சாநகர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டு தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தன்புர் தொகுதி பா.ஜனதா வசம்தான் இருந்தது. பிரதிமா பௌமிக் மத்திய மந்திரியானதால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் பிந்து டெப்நாத் போட்டியிட்டார். அவர் 30,017 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுசிக் சண்டா 11,146 வாக்குள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பழங்குடியின வகுப்பினரை சேர்ந்த 18,871 வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

    போக்சாநகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாம்சுல் ஹக் காலமானதால், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் 30,237 வாக்குகள் (சுமார் 66 சதவீதம்) சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்களுடையது. இதனால், இந்த வாக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.

    ஆனால் பா.ஜனதா வேட்பாளர் டஃபாஜ்ஜால் ஹொசைன் 34,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மிஜன் ஹொசைன் 3,909 வாக்குகள் பெற்றார்.

    ஏழு மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தன்புர் தொகுதியில் முதன்முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது.

    தேர்தலின்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸை சிபிஎம், காங்கிரஸ் எதிர்த்து நிற்கிறது
    • உத்தர பிரதேசத்தில் மீண்டும் தொகுதியை கைப்பற்ற விரும்பும் அகிலேஷ் யாதவ்

    ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    விரைவில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு இது பரிசோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தன்புர், பகேஷ்வர், துப்கரி தொகுதிகள் பா.ஜனதா வசம் இருந்தவை. உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள தொகுதிகள் முறையே சமாஜ்வாடி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவிடம் இருந்தவை. திரிபுரா மாநில தொகுதி சிபிஎம் இடம் இருந்தவை. புதுப்பள்ளி காங்கிரசிடம் இருந்தவை.

    தாரா சிங் சவுகான் பா.ஜனதாவில் மீண்டும் இணைந்ததால் உ.பி. கோசி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி அகிலேஷ் யாதவ் கூட்டணி பலத்தை நிரூபிக்க விரும்பும். அதேவேளையில் கேரளாவில் உம்மன்சாண்டி மகன் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    திரிபுராவில் வாக்கு எண்ணிக்கையை புறக்கணிக்க இருப்பதாக சிபிஎம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்ற போது முறைகேடு நடைபெற்றதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக சிபிஎம், காங்கிரஸ் இணைந்துள்ளன. மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திரிபுராவில் முதல் மந்திரி மாணிக் சஹா தாம் போட்டியிட்ட பர்தோவாலி டவுன் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றார்.
    • பஞ்சாப்பில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி சங்ரூர் பாராளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    3 பாராளுமன்றம், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேசத்தில் 2 பாராளுமன்ற தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் பாஜகவை ஆதரித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:

    ஆந்திரா, ஜார்க்கண்ட், டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் திரிபுராவில் பா.ஜ.க.வை ஆதரித்த வாக்காளர்களுக்கு நன்றி.

    மக்களின் நலனுக்காக பா.ஜ.க. தொடர்ந்து பணியாற்றும் என பதிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவில் பால்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் சில மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் விதிகளை மீறி தனியார் காரில் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
    பால்கர்:

    மகாராஷ்டிராவின் பந்த்ரா-கோண்டியா மற்றும் பால்கர் என இரு நாடாளுமன்ற தொகுதிகள், உத்தர பிரதேசத்தின் கைரானா மற்றும் நாகலாந்தில் ஒரு தொகுதி என 4 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.

    இந்த இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் டுவிட்டரில் குற்றச்சாட்டு எழுப்பினார்.  இதே தகவலை ராஷ்டீரிய லோக் தள கட்சியும் தெரிவித்திருந்தது.

    தேர்தல் விதிமுறைகளின்படி வாக்கு பதிவு முடிந்தபின் மின்னணு இயந்திரங்கள் அரசு வாகனத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

    ஆனால் பால்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பின்னர் சில மின்னணு இயந்திரங்கள் தனியார் கார் ஒன்றில் விதிகளை மீறி எடுத்து செல்லப்பட்டு உள்ளன.

    சில கிராமவாசிகள் காரை தடுத்து நிறுத்தி அதில் இருந்த தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர்.  பின் தகவல் அறிந்து வந்த போலீசார் காரில் இருந்தவர்கள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதனை அடுத்து பால்கர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரசாந்த் நார்னவாரே ஆகியோர், விதிகளை மீறிய தேர்தல் அதிகாரி மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×