செய்திகள்

ரெயில்வே வாரிய புதிய தலைவராக அஷ்வனி லோகனி நியமனம்

Published On 2017-08-23 12:02 GMT   |   Update On 2017-08-23 12:02 GMT
தொடர் ரெயில் விபத்துக்களுக்கு தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே வாரிய தலைவர் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவராக அஷ்வனி லோகனி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தரம் புரண்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் டெல்லியிலிருந்து ஆஸம்கார் செல்லும் கைபியாத் விரைவு ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 70 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, பா.ஜ.க. ஆட்சியில் அலட்சியம் காரணமாக ரெயில் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

ரெயில்வே அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், ரெயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரெயில்வே வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து வினய் மிட்டல் ராஜினாமா செய்தார். இதையடுத்து ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக அஷ்வனி லோகனி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இதேபோல், ரெயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரவும் ராஜினாமா செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News