தமிழ்நாடு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும்

Published On 2024-05-23 02:31 GMT   |   Update On 2024-05-23 02:31 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
  • கன்னியாகுமரியில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை தாழ்வு மண்டலாக மாறுகிறது.

இதன் எதிரொலியால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நாகை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரியில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் எதிரொலியால் அங்கு 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News